4 ஆண்டுகளில் 17,000 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை – மன்னிப்பு கோரிய ஆஸ்திரேலிய பிரதமர்

பாலியல் கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காக்கத் தவறியமைக்காக, ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

scott

ஆஸ்திரேலியாவில் 4 ஆண்டு கால ஆய்வு முடிவில் 17 ஆயிரம் குழந்தைகள் பாலியல் தொல்லைகளையும், கொடுமைகளையும் எதிர்கொண்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. இது குறித்து அறிந்த அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

மாரிசன் பேசியபோது, “ நம் தேச குழந்தைகள் ஏன் காக்கப்படவில்லை? ஏன் அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டது? குழந்தைகளின் அழுகை ஏன் புறக்கணிக்கப்பட்டது? நீதியின் கண்கள் ஏன் பார்வையிழந்தது? செயல்பட இவ்வளவு காலம் தாமதமானது ஏன்? அப்பாவிக் குழந்தைகளை பாதுகாப்பதை விட வேறு என்ன முக்கிய பணி இருந்தது? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர். அதன்பின்னர் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாதுகாக்க தவறியதால் அவர்களிடம் மாரிசன் மன்னிப்பு கோரினார்.

மாரிசன் மன்னிப்பு கேட்டபோது அந்த அரங்கம் முழுவதும் அமைதி நிலவியது. மாரிசன் தனது உரையை நிகழ்த்திய பிறகு குழந்தைகளைக் காப்பதற்கான ஆய்வுக் குழுக்கள் அமைத்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டார்.