கான்பரா

ன்று மீண்டும் ஆஸ்திரேலிய பிரதமராக ஸ்காட் மாரிசன் பதவி ஏற்றுக்கொண்டார்.

கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் ந்டந்த நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய ஆளும் கட்சியான லிபரல் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வெற்றி பெற்றது. அதை ஒட்டி லிஅரல் கட்சியின் உறுப்பினர்கள் ஒன்று கூடி ஸ்காட் மாரிசனை மீண்டும் பிரதமர் பதவிக்கு தேர்வு செய்தனர்.

இன்று ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் பதவி ஏற்பு விழா நடந்தது. இந்த விழாவில் ஸ்காட் மாரிசன் மீண்டும் பிரதமராக பதவி எற்றார். இந்த விழா கவர்னர் ஜெனரல் சர் பீட்டர் காஸ்குரோவ் முன்னிலையில் நடந்தது. துணைப் பிரதமர் மைக்கேல் மெக்கார்மேக் மற்றும் அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

இந்த விழாவில் உள்துறை அமைச்சராக கென் லியாத் என்பவர் பதவி ஏற்றார். இவர் பழங்குடியினரை சேர்ந்த முதல் அமைச்சர் ஆவார்.