பிரித்விராஜ் படத்திலிருந்து  விலகிய ஸ்கிரிப்ட் ரைட்டர்.. இயக்குனருடன் கருத்து வேறுபாடு..

கேரளாவில் 1921 மலபாரில் நடந்த போரட்டத்தை மையமாக வைத்து ’வாரியம்குன்னன்’ என்ற படம் உருவாகிறது. இதில் நடிகர் பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்கிறார், ஆஷிக் அபு இயக்குகிறார். இப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தார் ரமீஸ். ஆனால் அவர் தற்காலிகமாக படத்திலிருந்து விலகி இருப்பதாக இயக்குனர் தெரிவித்திருக் கிறார்.


’ரமீஸின் அரசியல் நிலைப்பாட்டை நான் ஏற்கவில்லை. என்னுடைய நிலைப்பட்டை ரமீஸ் ஏற்காமல்போகலாம். ரமீஸ் தனது நிலைப்பாடு முன்பு பகிரங்கமாக வெளிப்படுத்தி எதிர்ப்புக்கு பிறகு மன்னிப்பு கேட்டிருக்கிறார். ரமீஸ் பற்றி எனக்குத் தெரிய வந்தது மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு முன்புதான். அவர் வாரியம்குன்னன் படத்திலிருந்து தற்காலிகமாக விலகி இருக்கிறார்’ என குறிப்பிட்டிருக்கிறார்.