மெல்போர்ன்:

ஸ்திரேலியாவில் ஃபார்முலா -1 கார் பந்தயம் வருகின்ற மார்ச் 15ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலிய தலைநகர்  மெல்போர்னின் ஆல்பர்ட் பார்க் சர்க்யூட்டில் ஆஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸ்  ஃபார்முலா1 கால்பந்து போட்டி,  மார்ச் 13ந்தேதி  முதல் 15ந்தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது உலக நாடுகளை கொரோனா வைரஸ் மிரட்டி வரும் நிலையிலும், போட்டியை காண  ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வந்தனர். சுமார் 3 லட்சம் பேர் போட்டியைக் காண வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்,ஃபார்முலா1 போட்டியை  ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  ஆஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸ் கார்ப்பரேஷனுடன் இணைந்து எஃப்ஐஏ மற்றும் ஃபார்முலா 1 இந்த முடிவை எடுத்துள்ளது.

இதை முழுமையாக ஆதரிப்பதாக பிரபல கார் நிறுவனமான  ஸ்கூடெரியா ஃபெராரி  தெரிவித்து உள்ளது. அனைத்து குழு உறுப்பினர்களின் பாதுகாப்பே தங்களுக்கு முதன்மையான என்றும் தெரிவித்து உள்ளது. மேலும், முதலிடம், ஆல்பர்ட் பூங்காவிற்கு வந்து ஃபார்முலா 1 பந்தயத்தை தங்கள் வழக்கமான உற்சாகத்துடன் ஆதரிக்கவிருந்த ரசிகர்களுக்காகவும், உலகெங்கிலும் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்கும் நாங்கள் மிகவும் வருந்துகிறோம் என்றும் கூறி உள்ளது.