இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் திரில்லர் பேமிலி டிராமா ‘தம்பி’.

இப்படத்தில் ஜோதிகா அக்காவாகவும், கார்த்தி தம்பியாகவும் நடிக்கிறார். இவர்களது அப்பாவாக சத்யராஜ் நடிக்க, அம்மாவாக சீதா நடித்திருக்கிறார்.கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார்.

கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை எஸ்.டி.சி (SDC) பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நவம்பர் 30 ஆம் தேதி ‘தம்பி’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வை நடத்த திட்டமிட்டிருப்பதோடு, படத்தை வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியிடவும் முடிவு செய்துள்ளது எஸ்.டி.சி (SDC) பிக்சர்ஸ் நிறுவனம்