கர்நாடகாவில் எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளுக்கு தடை: அமைச்சர் தகவல்

பெங்களூரு: பெங்களூருவில் வன்முறை சம்பவங்களில் தொடர்புள்ளதன்  காரணமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளை தடை செய்ய கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த 2 அமைப்புகளுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய பிறகும், சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு தடை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும். மத ரீதியிலான கலவரம், சமூக வி

ரோத நடவடிக்கைகளில் இவ்விரு அமைப்புகளுக்கும் எதிரான ஆதாரங்களை திரட்டுமாறு மாநில அமைச்சரவை கேட்டு கொண்டுள்ளது.

இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் முத்துசுவாமி கூறியதாவது: பெங்களூரு கலவரம், அதில் இவ்விரு அமைப்புகளின் தொடர்பு குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், போலீசாரிடம் இருந்து எந்த பரிந்துரையும் வராததால், எந்த முடிவையும் எடுக்கவில்லை.

போலீசாரிடம் இருந்து அறிக்கை வந்த பிறகு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். ஆகஸ்டு 11ம் தேதியன்று நடந்த கலவரத்தில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய எஸ்டிபிஐ, பிஎப்ஐ மற்றும் குற்றவாளிகள் மீதான சட்ட நடவடிக்கை வாய்ப்புகள் ஆலோசிக்கப்படுகின்றன.

பொது சொத்துக்கு ஏற்பட்ட சேதத்தை அவர்களிடம் இருந்து வசூலிப்பது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டு உள்ளது. இழப்பீட்டை வசூலிக்கவும் தயங்க மாட்டோம் என்று கூறினார்.

You may have missed