Random image

கடல் சீற்றம் – மழைக்கு வாய்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

சென்னை:

ங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறக்கூடும். 44 – 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  இன்று அதிகாலை பலத்த மழை பெய்த நிலையில், தமிழகத்தில் மேலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வும்,  வளிமண்டலத்தில் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் இன்று அதிகாலை ஒருமணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது..

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத் உள்ளிட்ட இடங்களில் 4வது நாளாக நேற்றும் கனமழை பெய்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்றிரவு கனமழை பெய்தது. ஆசனூர், கெடிலம், அரசூர், மடப்பட்டு போன்ற இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

இதனிடையே, மத்திய கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாலும்,தெற்கு ஆந்திரா முதல் கோவா வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாலும் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.