மாஃபாரு, மாலத்தீவு

மாலத்தீவில் உள்ள மாஃபாரு சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தில் ஒரு கடல் ஆமை முட்டைகள் இட்டுள்ளன.

மாலத்தீவு என்பது இந்திய பெருங்கடலில் உள்ள தீவுகளைக் கொண்ட நாடாகும்.   இந்துள்ள மாஃபாரு என்னும் கடற்கரை நகரில் இந்த நாட்டின் புகழ்பெற்ற சர்வதேச விமான நிலையம் உள்ளது.    கடற்கரை நகரான மாஃபாருவில் கடல் ஆமைகள் நடமாட்டம் அதிகம் காணப்படும்.   இந்தப் பகுதியில் வந்து அவைகள் முட்டையிடுவது வழக்கம்.

ஒரு கடல் ஆமை கடற்கரையை விட்டு வெகுதூரம் வந்து மாஃபாரு சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் முட்டைகள் இட்டுள்ளது.   இதை கண்ட விமானநிலைய அதிகாரிகள் முட்டைகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றி விட்டு  கடல் ஆமையை மீண்டும் கடலுக்குள் கொண்டு போய் விட்டுள்ளனர்.

இது குறித்து கடல்வாழ் உயிரன ஆர்வலர்கள், ”இந்த இடம் ஒரு காலத்தில் கடற்கரை ஓரமாக இருந்துள்ளது.   அப்போது இங்கு கடல் ஆமைகள் முட்டையிட்டு விட்டு செல்வது வழக்கமாக இருந்துள்ளது.   பொதுவாக கடல் ஆமைகள் தாங்கள் பிறந்த இடத்தில் வந்து முட்டையிட்டு விட்டு செல்வது வழக்கம்” என தெரிவித்துள்ளனர்.

இந்த விமான நிலைய ஓடுபாதை அமைக்கப்பட்டு பல நாட்கள் ஆன பிறகும் கடல் ஆமை தேடி வந்து முட்டையிட்டது ஒரு அதிசய நிகழ்வாக கருதப்படுகிறது.   இந்த விமான நிலைய ஓடுபாதை அமைக்கப்பட்ட பிறது இவ்வாறு கடல் ஆமை வந்து முட்டை இடுவது இது வே முதல் முறையாகும்.