கன்னியாகுமரி கடற்கரை கிராமங்களில் கடல் நீர் புகுந்தது

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில் பாடு கிராமத்திற்குள் கடல்நீர் புகுந்தது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் கடல் அலைகள் ஆக்ரோஷ்மாகவும், வழக்கத்தை விட உயர்ந்தும் காணப்படும் என்று தமிழக அரசு எச்சரித்திருந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இந்நிலையில் கன்னயிகுமரி மாவட்ட மேற்கு கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது. ராட்சத அலைகள் எழுந்ததால் கிராமத்திற்குள் கடல் நீர் புகுந்தது. இதில் வீடுகளை இழந்தவர்கள் உறவினர்ன் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

குளச்சல் கொட்டில்பாடு உள்ளிட்ட பகுதிகளில் கடலின் சீற்றம் அதிகமாக உள்ளது. கடலோர மக்களை பாதுகாக்கும் வகையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.