படிக்கட்டில் பயணம் செய்யும் ரெயில் பயணிகளின் பாஸ் ரத்து

சென்னை

ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்யும் பயணிகளின் பாஸ் மற்றும் சீசன் டிக்கட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன

சென்னையில் மின்சார ரெயிலில் கூட்டம் அலைமோதும் நேரத்தில் பலர் படிக்கட்டுகளில் தொற்றிக் கொண்டு பயணம் செய்வது வழக்கமான ஒன்றாகும்.    இது உயிருக்கு ஆபத்து என பல முறை அறிவுறுத்தியும் அதை பயணிகள் பொருட் படுத்துவதில்லை.   இந்நிலையில் சென்னை கோட்ட ரெயில்வே பாதுகாப்புப் படை ஆணையர் லூயிஸ் அமுதன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போதுஅவர், “ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்யக் கூடாது என பல முறை வற்புறுத்தியும் படிக்கட்டுப் பயணத்தை பயணிகள் நிறுத்துவதில்லை.   கடந்த வருடம் மட்டும்  சென்னைக் கோட்டத்தில் படிக்கட்டில் பயணம் செய்த 7627 பேரின் பாஸ் மற்றும் சீசன் டிக்கட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  இந்த நடவடிக்கை இந்த வருடமும் தொடரும்.    அது தவிர படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை வீடியோ படம் எடுத்து அவர்கள் படிக்கும் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.