திமுகவுடனான தொகுதி பங்கீடு ஓரிரு நாள்களில் இறுதியாகும்: கே.எஸ். அழகிரி பேட்டி

சென்னை: திமுகவுடனான தொகுதி பங்கீடு ஓரிரு நாள்களில் இறுதியாகும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுகவுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கே.எஸ். அழகிரி கூறியதாவது: கூட்டணி பேச்சு வார்த்தையில் இழுபறி இல்லை. சுமூகமாக நடைபெற்று வருகிறது.

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படும். பேச்சுவார்த்தையை இறுதி செய்வதில் தாமதம் இல்லை. எங்களுக்கு தேவையான எண்ணிக்கையைக் கேட்டுள்ளோம்.

அவர்களும் அதுகுறித்து கேட்டிருக்கிறார்கள். எங்களுக்கிடையே எந்த சிக்கலும் இல்லை. ஸ்டாலினும், ராகுல் காந்தியும் இணைந்து பிரசாரம் மேற்கொள்வது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.