பாட்னா

க்கிய ஜனதா தளத்தில் சேர்வதற்காக ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டேவுக்கு பீகார் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.  இந்த தேர்தல் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் பாஜக சார்பில் வெளியான முதல் பட்டியலில் 27 வேட்பாளர்கள் பட்டியல் இடம் பெற்றுள்ளது.  இதில் புக்சார் மற்றும் பாரம்பூர் தொகுதிகளுக்கான பெயர்கள் அறிவிக்கப்படாமல் பிறகு அறிவிக்கப்பட்டது.

புக்சார் தொகுதிக்கு பாஜகவின் கூட்டணிக் கட்சியான விகாஷ்ஷீல் இன்சான் கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது  இக்கட்சி கடந்த புதன்கிழமை பாஜக கூட்டணியில் இணைந்தது.  இதனால் இந்த தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து போட்டியிட நினைத்த முன்னாள் டி ஜி பி  குப்தேஸ்வர் பாண்டேவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய் உள்ளது.  இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

இதையொட்டி பாண்டே தனது முகநூல் பதிவில் அவர் தாம் தேர்தலில் போட்டியிடாததால் தமது ஆதரவாளர்கள் யாரும் ம்,அனம் தளர வேண்டாம் எனவும் அவர் என்றும் பீகார் மக்களுக்காக உழைக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.   ஆனால் கூட்டணியில்  இந்த தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதில் இருந்தே பாண்டே ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரு மூத்த பாஜக தலைவர், ”பீகாருக்கு வெளியே ஏற்கனவே எதிர்க்கட்சிகள் பீகார் ஆளும் கட்சி முன்னாள் டிஜிபி மூலம் மட்டமான அரசியலில் ஈடுபட்டதாகக் கூறி வருகின்றன.  இதை மனதில் கொண்டே இம்முறை பாண்டேவுக்கு தேர்தல் வாய்ப்பு அளிக்கவில்லை” என தெரிவித்துள்ளார். ஆனால் ஐக்கிய ஜனதா தள தலைவர் ஒருவர் பாண்டேவுக்கு வால்மீகி நகர் மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.