தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு அறிவிப்பு

தராபாத்

டிசம்பரில் நடைபெற உள்ள தெலுங்கான சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் டிசம்பர் மாதம் தெலுங்கானா மாநில சட்டப்பேரவி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி மற்றும் பாஜக தனித்து போட்டியிட உள்ளன. இன்று காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதை ஒட்டி தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவ்ர் உத்தம் குமார் ரெட்டி வெலியிட்டார். அந்த அறிவிப்பின்படி மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 95 இடங்களில் காங்கிரஸும் 14 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியும் போட்டியிட உள்ளன.

இந்த கூட்டணியில் தெலுங்கானா ஜன சமிதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த காங்கிரஸ் – தெலுங்கானா கூட்டணியால் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி கடும் போட்டியை எதிர்கொள்ள நேரிடும் என அரசியல் நோக்கர்கள் கூறி உள்ளனர்.