மாநிலங்களவையில் இருக்கை ஒதுக்கீட்டை வைத்து உறுப்பினர் நிலையை அறிய முடியுமா?

டில்லி

மாநிலங்களவையில் உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் இருக்கைகள் குறித்த விவரத்தை நாம் இங்கு பார்ப்போம்.

பாஜகவுடனான கூட்டணியை  சிவசேனா கட்சி முறித்துக் கொண்ட பிறகு அக்கட்சிக்கு எதிர்க்கட்சி வரிசையில் இடம் அளிக்கப்பட்டது.  அது குறித்து அக்கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் சஞ்சய் ரவுத் இந்த இடமாற்றம் தனனையும் தன் கட்சியினரையும் வேண்டுமென்றே கொடுமை செய்வது போல் அமைந்துள்ளதாகக் குற்றம் சாட்டி உள்ளார்.  இவ்வாறு இருக்கை ஒதுக்கப்பட்டது குறித்து ஒரு ஆய்வு செய்தி இதோ.

மக்களவையில் சபாநாயகருக்கு வலதுபுறமும்  மாநிலங்களவையில் தலைவருக்கு வலது புறமும் ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினருக்கு இருக்கைகள் வழஙக்ப்படும். இதில் மக்களவையில் அதிக உறுப்பினர்னர்கல் உள்ள கட்சிக்கு இருக்கை ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும்.  மாநிலங்களவையில் உறுப்பினருக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப்படும்.  அதே போல் இடது புறம் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளுக்கு இருக்கை ஒதுக்கப்படும்.

சஞ்சய் ரவுத் முதலில் மாநிலங்களவையில் மூன்றாம் வரிசையில் அமர்ந்திருந்தார்.  தற்போது அவருக்கு ஐந்தாம் வரிசை ஒதுக்கப்பட்டுள்ளது.   ஏற்கனவே இருக்கைகள் ஒதுக்கப்பட்டபோது பாஜக கூட்டணியில் சிவசேனா இடம் பெற்றிருந்தது. ஆனால் தற்போது கூட்டணியில் இருந்து சிவசேனா விலகியதால் அக்கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை பொருத்து இடமாற்றம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது

இரு அவைகளிலும் 5 உறுப்பினர்களை விட அதிகம் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு முன் வரிசைகளில் இடம் ஒதுக்குவது வழக்கமாகும்.  ஆனால் தற்போது சிவசேனா கட்சி  எதிர்க்கட்சி கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இடம்பெறாததால் அக்கட்சியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையான 3 என்பதன் அடிப்படையில் பின் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   அதே வேளையில் மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு விரும்பினால் உறுப்பினர்களின் அனுபவ மூப்பை பொருத்து இருக்கை மாற்றம் செய்ய முடியும்.