சென்னை:

டந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் போதிய மழை இல்லாத நிலையில், நிலத்தடி நீர் மட்டடும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இந்த நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் 700 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீரில் கடல் நீர் ஊடுருவி உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

குடியிருப்புவாசிகள் நிலத்தடி நீரை சேமிக்காமல், கண்மூடித்தனமாக நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்று வதால், பல பகுதிகளில் கடல்நீர் நிலத்தடி நீரோடு கலந்துள்ளது என்று தெரிவித்து உள்ளது.

சென்னை கடற்கரை பகுதிகளான அடையாறு முதல், முதல் முத்துகாடு வரை உள்ள பகுதிகளில் சுமார் 700 மீட்டர் வரை  கடல் நீர் ஊடுவி உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்குள், 30 க்கும் மேற்பட்ட கிணறுகளை ஆய்வு செய்தனர். அங்கு எடுக்கப்பட்ட நிலத்தடி  நீரில் மொத்தமாக கரைந்த திடப்பொருட்களை (டி.டி.எஸ்) 2,500 முதல் 3,000 பாகங்கள் (பிபிஎம்) வரை காட்டுகின்றன. இந்திய தர நிர்ணய பணியகத்தின் (பிஐஎஸ்) படி, தண்ணீரில் டி.டி.எஸ்ஸின் மேல் எல்லை 500 பிபிஎம் ஆகும். ஆனால் இந்த பகுதிகளில் அதிக அளவிலான உப்பு கலந்துள்ளதால், டிடிஎஸ் அதிக அளவை காட்டுவதாக தெரிவித்து உள்ளனர்.

இந்த பகுதிகளில் எடுத்து ஆய்வு செய்யப்பட்ட நிலத்தடி நீரில், கடல்நீரில் காணப்படும்  குளோரைடு மற்றும் சோடியம் போன்றவை ஊடுருவி உள்ளது தெரிய வந்துள்ளதாகவும், பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை, பாலவக்கம், அக்கரை மற்றும் உத்தண்டி ஆகியவை பகுதிகள் கடல்நீரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் என்றும் தெரிவித்து உள்ளது.

‘மழைநீரை சரியான முறையில் சேமிக்காமல், அந்த பகுதிகளில் உள்ள கட்டிடங்கள்  நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதால் கடல்நீர் புகுந்துள்ளது என்று  ”என்று அண்ணா பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் எல் எலாங்கோ கூறினார்.

இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு “மெட்ரோ வாட்டர் குழாய் நீர் விநியோகத்தை வழங்கினால், நிலத்தடி நீர் உறிஞ்சுவது குறையும் என்றும், மழைநீர் சேகரிப்பு மூலம்  நிலத்தடி நீரின் தரத்தை மீட்டெடுக்க முடியும்,” என்று அவர் கூறினார்.