ஐசிஐசிஐ முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பித் தர செபி உத்தரவு

டில்லி

சிஐசிஐ பரஸ்பர நிதி முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பித் தர பங்கு வர்த்தக கட்டுப்பாடு நிறுவனமான செபி உத்தரவிட்டுள்ளது.

ஐசிஐசிஐ பரஸ்பர நிதி நிறுவனம் தனது ஐந்து திட்டங்களின் பங்குகள் விற்பனையை அறிவித்தது.    அதன் மூலம் 7.7 கோடி பங்குகளை ரூ.3500 கோடிக்கு விற்பனை செய்தது.   ஆனால் இந்த பங்குகளை சரியான முறையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படவில்லை என குற்றசாட்டு எழுந்தது.    மேலும் இதனால்  பங்குகளின் விலை மிகவும் குறையத் தொடங்கியது.

இது குறித்து பங்குச் சந்தை வர்த்தக கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர்.    பரஸ்பர நிதி சட்டப்படி இந்தப்  பணம் பயன் படுத்தப் படவில்லை எனவும் அதனால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.   இந்த புகாரை விசாரித்த செபி பங்குச் சந்தை விதிகளுக்கு மாறாக இந்த பணம் நிறுவனத்தால் உபயோகிக்கப்பட்டதை கண்டறிந்தது.

அதை ஒட்டி செபி முதலீட்டாளர்களின் பணத்தை உடனடியாக 15% வட்டியுடன் ஐசிஐசிஐ பரஸ்பர நிதி நிறுவனம் திருப்பித் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: SEBI ordered to return money to ICICI investors
-=-