புவேனேஷ்வர்: கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுத் தொடரின் 200மீ ஓட்டத்தில் வென்று, இரண்டாவது தங்கத்தைக் கைப்பற்றியுள்ளார் டுட்டீ சந்த்.

ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஷ்வரில், கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுத் தொடர் நடக்கிறது. இதில், மகளிர் பிரிவில் 200மீ ஓட்டப்போட்டி நடைபெற்றது.

இதில், டுட்டீ சந்த், பந்தய தூரத்தை 23.66 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இவர், கலிங்கா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி சார்பில் பங்கேற்றவர். இவர், ஏற்கனவே 100மீ போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார்.

இவர், கடந்த 2018ம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு 200மீ இறுதிப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்றவர். அதேசமயம், டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதிபெறுவதற்கான இலக்காக 22.80 வினாடிகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.