யக்குநர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்து , 2006 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன திரைப்படம்,  இம்சை அரசன் 23ம் புலிகேசி.  இந்த படம் வெளியாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

நேற்று முன்தினம்தான் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஷங்கர் அறிவித்தார்.

ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்த அறிவிப்பு இது. அதே நேரம், இன்னொரு அக்கப்போரும் கிளம்பிவிட்டது.

“முதல் பாகத்தில் நடித்த வடிவேலு, இரண்டாம் பாகத்தில் இல்லை” என்பதுதான் அது.

23ம் புலிகேசியின் மிகப்பெரிய ப்ளஸ், சிம்புதேவனின் இயக்கம், வசனங்கள்  என்றாலும், வடிவேலுவை விட்டுவிட முடியாது. அவரது அசாத்திய நடிப்பு படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ்.

இந்த நிலையில்தான், “இரண்டாம் பாகத்தில் வடிவேலு இல்லை” என்று ஒரு தகவல் கோடம்பாக்கத்தையே கிடுகிடுக்க வைத்திருக்கிறது.

இப்படி பேசுபவர்கள் என்ன சொல்கிறார்கள்?

”23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று ஒரு வருடத்துக்கு முன்பே டைரக்டர் ஷங்கர் முடிவெடுத்துவிட்டார். இது குறித்து அப்போதே இயக்குநர் சிம்புதேவனை அழைத்து பேசினார். அவரும் உற்சாகமாக ஸ்கிரிப்ட் தயார் செய்ய இறங்கியதோடு, நடிகர் வடிவேலுவிடம் இது குறித்து பேசினார்.

வடிவேலு மிக மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று… மார்க்கெட் டல் ஆகிக் கிடக்கும் நிலையில் வரும் ஹீரோ வாய்ப்பு. இரண்டு… 23ம் புலிகேசி சக்கைபோடு போட்ட படம்.

ஆக படத்தின் இயக்குநர் ஸ்கிரிப்ட் ரெடி செய்து, படப்படிப்புக்கு கிளம்பலாம் என்கிற நிலைக்கு வந்த சூழல். படத்தை, ஃபர்ஸ்ட் காப்பி முறையில் ஷங்கர் தயாரிக்க, லைக்கா நிறுவனம் வெளியிட முன்வந்தது.

இந்தத் தகவல் கிடைத்ததும், தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி கேட்டார் வடிவேலு.

தயாரிப்பாளரான ஷங்கர் இதனால் அதிர்ந்தார். வடிவேலுவிடம் பேசிப்பார்த்தார்கள். ஆனால் அவர் இறங்கிவருவதாக இல்லை. ஆகவே வேறு வழியின்றி படப்பிடிப்பை தள்ளி வைத்துவிட்டார்கள்.

“வடிவேலு ஓவராக பிகு பண்ணுகிறார். தவிர மார்க்கெட்டும் இல்லை” என்று யோசித்த ஷங்கர்,  வடிவேலுவுக்கு பதிலாக வேறு நடிகரை ஹீரோவாக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். இது குறித்து படத்தின் இயக்குநர் சிம்புதேவனிடமும் விவாதித்தார். சிம்புதேவனும் வேறு நடிகரை ஹீரோவாக போடலாம் என்பதை ஆமோதித்தார்.

இந்த படத்தின் ரியல் ஹீரோ கதையும், வசனமும் தான் என இருவரும் தீவிரமாக நம்புகிறார்கள். இதையடுத்துதான், வேறு (நகைச்சுவை) நடிகர்களை பரிசீலனை செய்தார்கள்.

சரித்திர படத்துக்கு சந்தானம் சரிப்பட மாட்டார் என்பதால் முதல் ரவுண்டிலேயே அவரது பெயர் அடிபட்டு விட்டது. 23ம் புலிகேசியில் (மங்குனி) மந்திரியாக நடித்த இளவரசுவையும் பரிசீலித்தார்கள். பிறகு அவரையும் தவிர்த்துவிட்டார்கள்.

இறுதியில் புரோட்டா சூரியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவருடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

இதனால்தான், 23ம் புலிகேசி இரண்டாம் பாக அறிவிப்புக்கு வடிவேலுவின் படத்தை தவிர்த்துவிட்டு, சிம்புதேவனின் கார்டூனோடு அறிவித்தார் ஷங்கர்” என்கிறார்கள் இவர்கள்.

அதே நேரம், “வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது. அதனால்தான் சூரி படமும் இல்லாமல் கார்டூன் படத்தோடு அறிவிப்பை வெளியிட்டார் ஷங்கர்” என்றும் ஒரு தரப்பு சொல்கிறது.

எப்படியோ.. சூரி, 23ம் புலிகேசியாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!