இரண்டாம் கட்டமாக இந்தியா வரும் 4 ரஃபேல் விமானங்கள்

டில்லி

பிரான்சில் இருந்து இன்னும் சில வாரங்களில் இரண்டாம் கட்டமாக  4 ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வர உள்ளன.

இந்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் வகை போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் இட்டது.  அதில் பல பேரங்கள் நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் கூறின.  அதை ஆளும் பாஜக அரசு மறுத்தது.  இந்த சர்ச்சை இன்று வரை தொடர்ந்து வருகிறது.

கடண்டஹ் ஜூலை மாதம் 29 ஆம் தேதி 5 ரஃபேல் விமானங்கள் முதல் கட்டமாக இந்தியா வந்தடைந்தது.  அவை கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன.  தற்போது இன்னும் சில வாரங்களில் இரண்டாம் கட்டமாக 4 ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானப்படை சார்பில் சமீபத்தில் ஒரு நிகழ்வு ஒன்று நடந்தது. அப்போது தளபதி பதாரியா,வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் அனைத்து 36 விமானங்களும் இந்தியா வந்துவிடும் எனத் தெரிவித்திருந்தார்.  தற்போது எல்லையில் சீனப்படைகளால் பதற்றம் நிலவும் நேரத்தில் ரஃபேல் விமானங்கள் வருகை விமானப்படையின் திறனை அதிகரித்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்