இரண்டாவது டெஸ்ட் – இலங்கையை முற்றாக ஆதிக்கம் செலுத்தும் தென்னாப்பிரிக்கா!
கேப்டவுன்: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் நிலவரப்படி, மிக வலுவான நிலையில் உள்ளது தென்னாப்பிரிக்க அணி.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில், குசால் பெராரா மட்டுமே 60 ரன்களை அதிகபட்சமாக அடித்தார். அதற்கடுத்து ஹசரன்கா அடித்த 29 ரன்களே இரண்டாவது பெரிய ரன்கள். சமீரா 22 ரன்களை மட்டுமே அடிக்க, 157 ரன்களுக்கே இலங்கையின் முதல் இன்னிங்ஸ் காலியானது.
தென்னாப்பிரிக்காவின் நார்ட்ஜே 6 விக்கெட்டுகளை அள்ளினார். வியான் முல்டர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர், முதல் நாளிலேயே களமிறங்கிய தென்னாப்பிரிக்காவின் டீன் எல்கர் 92 ரன்களை அடித்து நாட்அவுட்டாக களத்தில் உள்ளார். அவர், இதற்கு எடுத்துக்கொண்ட பந்துகள் வெறும் 119 மட்டுமே. டுஸேன் 40 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
தற்போதைய நிலையில், 1 விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில், 148 ரன்களை அடித்து, இலங்கையைவிட 9 ரன்களே பின்தங்கியுள்ளது.
கடந்த டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க இன்னிங்ஸ் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.