Random image

தமிழ்நாடு : இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

சென்னை

ரே பணி ஒரே ஊதியம் என்னும் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக நடைபெற்று வத இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் பணி புரியும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தில் முரண்பாடு உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அதற்கு முன்னதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் இடையில் ஊதியத்தில் மிகவும் வேறுபாடு இருந்து வருகிறது. இதை ஒட்டி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 24ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்கள். அவர்கள் தங்கள் போராட்டத்தை சென்னை டி பி ஐ வளாகத்தில் நடத்தி வந்தனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரிய ஆசிரியைகள் கலந்துக் கொண்டுள்ள இந்த போராட்டத்தில் ஆசிரியைகளின் கணவர் மற்றும் குழந்தைகளும் கலந்துக் கொண்டனர்.

கடுமையான பனி பெய்த போதிலும் தொடர்ந்து 6 தினங்கள் உண்ணாவிரதம் இருந்ததாஅல் பல ஆசிரியர்களுடல் சோர்வுற்றனர். சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் அடிக்கடி மயங்கி விழுந்தனர். ஆயினும் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடவில்லை. ஏற்கனவே நடந்த பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்ததால் ஆசிரிய ஆசிரியைகள் தொடர்ந்து உண்ணாவிரத போராடம் நடத்தினார்கள்.

நேற்று பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதிப் யாதவ் உண்ணாவிரதம் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தைகள் முடிவில் இந்த ஊதிய முரண்பாடுகளை களைய அரசு ஒப்புக் கொள்வதாகவும் இது குறித்து ஒரு நபர் ஆணையம் அறிக்கை அளித்ததும் அரசு ஆவன செய்யும் என எழுத்து பூர்வமாக யாதவ் உறுதி அளித்தார். அதை ஒட்டி ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளனர்.