இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை:

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 4 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 4 நாட்களாக சென்னை கிண்டியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தனர்.

இதனைதொடர்ந்து பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வருடன் கலந்து பேசி தீர்வுகாணப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து போரட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.