பிரபல நடிகருக்கு ரகசிய திருமணமா?வதந்தி என்கிறார் ரோமியோ ஹீரோ..

ர்யா நடித்த அறிந்தும் அறியாமலும் படத்தில் அவரது தம்பியாக நடித்தவர் நவ்தீப். இளவட்டம், ஏகன், இது என்ன மாயம் என ஒருசில படங்களில் நடித்திருக்கும் இவர் தெலுங்கில் வில்லன் நடிகராக கொடிகட்டி பறக்கிறார்.
இவரை ரோமியோ ஹீரோ என்று சக நடிகர்கள் அழைக்கின்றனர். அதற்கு காரணம் பல பெண்களுடன் நெருக்கமான பழக்கம் கொண்டவர். இவருக்கு பண்ணை வீடு ஒன்று உள்ளது அங்கு அடிக்கடி நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து அசத்துவார். சில தினக்களாக நவ்தீபிற்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக நெட்டில் தகவல் பரவியது.

 

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘எனக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக கூறுவது யாரோ கிளப்பி விட்ட வதந்தி. நான் இன்னும் தகுதி வாய்ந்த பிரம்மச்சாரி தான். எத்தனைமுறைதான் இதுபோல் எனக்கு போலியாக கல்யாணம் செய்து வைப்பார்கள் என்று தெரியவில்லை. எனக்கு சில பெண்கள் மீது காதல் வந்திருக்கிறது. அதெல்லாம் பிரேக் அப் தான் ஆகியிருக்கிறது. எனக்கு கல்யாணம் என்றால் நானே அதை சொல்வேன்” என்றார் நவதீப்.