சென்னை,

மிழகத்தில் கடந்த 7ந்தேதி முதல் நடைபெற்று வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக தலைமை செயலக ஊழியர்களும் இன்றுமுதல் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தலைமை செயலகத்தில் ஒரு பிரிவினர் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கோட்டையில் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியம், 7வது ஊதிய கமிஷன் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ, ஜியோ அமைப்பினரின் தொடர் போராட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

கடந்த 7ந்தேதி முதல் நடைபெற்று வரும் போராட்டத்தின் காரணமாக பெரும்பாலான பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முடங்கி உள்ளன. போராட்டத்துக்கு கோர்ட்டு தடை விதித்தும், அதை மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் போராடும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக தலைமை செயலக ஊழியர்களும் இன்று முதல் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் வருவாய்துறை ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்து உள்ளனர்.

ஜாக்டோ, ஜியோ அமைப்பின் போராட்டத்தை ஆதரரித்து  சென்னை தலைமை செயலகத்தில் பெரும்பாலான ஊரியர்கள் நேற்று பணியின்போது கருப்புச்சட்டை அணிந்தும், கருப்புக்கொடியை சட்டையில் அணிந்தும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடியுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.

இதையடுத்து, தலைமை செயலக ஊழியர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

அப்போது, ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி உடல்நலமில்லாமல் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக தமிழகத்தில் இன்று வரை ஆட்சி முடங்கிபோய்  உள்ளது.

தமிழக  அரசியல் கட்சியினரும், பொது மக்களும் அரசு நடைபெறவில்லை என்று  குற்றம் சாட்டி வருகின்ற நிலையில், தற்போது அரசு ஊழியர்களின் போராட்டம் காரணமாகவும் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் செயலிழந்து உள்ளன.

அவர்களுக்F  ஆதரவாக தற்போது  தலைமை செயலக ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இன்று காலை சென்னை தலைமை செயலகம் அருகே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக கடும் போக்குவரத்த நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக  தமிழகத்தில் அரசு பணிகள் நடைபெறாமல், ஆட்சியும், அரசும்  மேலும் ஸ்தம்பித்து போகும் சூழல் உருவாகி வருதையே காட்டுகிறது.