பூமியில் முதல் விலங்கு தோன்றியது எப்படி?: விஞ்ஞாணிகள் கண்டுபிடிப்பு

மெல்போர்ன்:

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மத்திய ஆஸ்திரேலியாவில் உள்ள பண்டைய வண்டல் பாறைகளை ஆய்வு செய்தனர். அப்போது 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே விலங்குகளின் பரிணாமம் தொடங்கியது என்பதைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் ஜோசன் புரோக் கூறுகையில், ‘‘ நாங்கள் அந்த பாறைகளை தூள் தூளாக்கினோம் அதில் இருந்து பண்டைய உயிரினங்களின் மூலக் கூறுகளை பிரித்தெடுத்தோம். இந்த மூலக்கூறுகள் உண்மையில் 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மாறியதாக நமக்குத் தெரியவந்துள்ளது. இந்த மாற்றம் எழுச்சி பூமியின் வரலாற்றில் மிகவும் ஆழ்ந்த சுற்றுச்சூழல் புரட்சிகளில் ஒன்று.

இது நடப்பதற்கு முன்பு ஒரு பனிப்பொழிவு நிகழ்ந்து பூமியை 50 மில்லியன் ஆண்டுகளாக முடக்கியது. பனி ஒரு தீவிர உலகளாவிய வெப்ப மூட்டும் போது உருகி ஆறுகளாக ஓடி கடலில் ஊட்டசத்துக்களை தோற்றுவித்தன. கடலில் மிக அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உருவாகியது. இது ஆதிக்கம் செலுத்தும் கடல்களில் இருந்து மிகவும் சிக்கலான வாழ்க்கை வாழ்ந்த உலகிற்கு பாக்டீரியா மூலம் மாற்றபட்டது.

உணவு வலையின் அடிப்பகுதியில் உள்ள இந்த பெரிய மற்றும் சத்துள்ள உயிரினங்கள் சிக்கலான சுற்றுச்சூழல் பரிணாம வளர்ச்சிக்கு தேவையான ஆற்றலை வழங்கியுள்ளன. அதிகரித்து வரும் பெரிய மற்றும் சிக்கலான விலங்குகள், மனிதர்கள் உள்பட, பூமியிலேயே உருவாக முடியும் என கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: secrets of first animal born in earth scientist invention, பூமியில் முதல் விலங்கு தோன்றியது எப்படி?: விஞ்ஞாணிகள் கண்டுபிடிப்பு
-=-