காட்டிக்கொடுக்கும்  பைசா கோபுர ஏற்பாடுகள்…

உலக அதிசயங்களுள் ஒன்றான இத்தாலி நாட்டின் சாய்ந்த கோபுரமான பைசா, ஊரடங்கால் மூடப்பட்டு 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 50 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்லும் பைசா கோபுரம், 3 மாதங்களாக  வெறிச்சோடி கிடந்தது.

இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இப்போது கடுமையான நிபந்தனைகளுடன் கோபுரம் திறக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

முகக்கவசம் அணிவது முக்கியம். அதை விட முக்கியம், தனி நபர் இடைவெளி.

இதற்காக விஷேச ஏற்பாட்டைக் கோபுர பராமரிப்பு நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.

என்ன ஏற்பாடு?

தனி நபர் இடைவெளியை கடைப்பிடிக்க, கோபுரத்தில் நீங்கள் நுழையும் போது, உங்கள் உடம்பில் மின்னணு சாதனம் ஒன்று பொருத்தப்படும்.

உங்களுக்குப் பக்கத்தில் நிற்கும் நபருடன் ஒரு மீட்டர் இடைவெளியை நீங்கள் பின் பற்றாவிட்டால், அந்த சாதனம் எச்சரிக்கை ஒலி எழுப்பும்,.சிக்னல் கொடுக்கும்.

நீங்கள் சுதாரித்துக்கொண்டு, இடைவெளியைக் கடைப் பிடிக்க வேண்டும்.

‘’இது ஒரு புதிய அத்தியாயம் . இன்று ஒரு முக்கியமான நாள்’’ என்று பைசா கோபுரம் திறக்கப்பட்டதையொட்டி சுற்றுலாப் பயணிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார், கோபுர பராமரிப்பு குழு தலைவர்  பியர் பிரான்சிஸ்கோ

– பா.பாரதி