பலத்த பாதுகாப்புடன் நடந்த புத்தர் பிறந்ததின கொண்டாட்டம்

கயா:

புத்தரின் 2563-வது பிறந்தநாள் கொண்டாட்டம் சனிக்கிழமை முடிவடைந்தது.


புத்தரின் பிறந்தநாள் விழா அவர் பிறந்த கயாவில் 3 நாட்கள் கொண்டாடப்பட்டது.

வியட்நாமைச் சேர்ந்த புத்தபிட்சுகள் புத்தம் சரணம் கச்சாமி என்று போதி மரத்தின் அடியில் அமர்ந்தவாறு பாடிக் கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்காக பலத்த போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது.

கயாவில் புத்தர் பிறந்ததின கொண்டாட்டம் நடக்கும் போதெல்லாம், பங்களாதேஷை சேர்ந்த ஜமாத் உல் முகையதீன் என்ற தீவிரவாத அமைப்பின் அச்சுறுத்தல் இருந்து வருகிறது.

இதனால் உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு மட்டுமின்றி, சிஆர்பிஎஃப் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.