பயங்கரவாத தாக்குதல் சதி எதிரொலி : விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

டில்லி

புத்தாண்டு சமயத்தில் பயங்கர வாத தாக்குதல்கள் நடைபெற சதி உள்ளதாக வந்த செய்தியை அடுத்து விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

மத்திய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு இந்திய விமான நிலயங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில், “புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கி உள்ள இந்த நேரத்தில் பயங்கர வாதத் தாக்குதல்கள் நிகழக்கூடும் என தகவல்கள் வந்துள்ளன.  எனவே தற்போது அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றன.

பயங்கர வாத இயங்க்கங்கள், தற்கொலை தாக்குதல், வெடிகுண்டு வைத்தல்,  வாகனங்கள் மூலம் பெரும் விபத்து ஏற்படுத்துதல்,  மக்கள் கூடும் இடத்தில் துப்பாக்கி சூடு நடத்த சதி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.  எனவே பயணிகளின் உடமைகளையும் பயணைகளையும் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.  வாகனம் நிறுத்தும் இடங்களிலும் கடுமையான சோதனையும் தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ள வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து விமான நிலையங்களில பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.