பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்த கோரிக்கை

இஸ்லாமாபாத்:

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் ஏராளமான ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மத்தியஅரசின் முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இரு நாட்டு எல்லைப்பகுதிகளிலும் பதற்றம் தொற்றி உள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்பு உள்ள நிலையில், பாதுகாப்பு தர கோரிக்கை  விடுக்கப்பட்டு உள்ளது. தங்களுக்கான  பாதுகாப்பை பலப்படுத்துமாறு இந்திய தூதரக அதிகாரிகள் பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.