சென்னை,

டிடிவி  தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் பதிவு செய்துள்ள தேச துரோக வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 2ந்தேதி எம்ஜிஆர் நுற்றாண்டு விழா காரணமாக சேலம் சென்ற முதல்வர் எடப்பாடிக்கு எதிராக  பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகித்ததாக டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள்மீது  சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில், டிடிவி தினகரன் மற்றும்  சபாநாயகரால்  தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேல், பெங்களூரு புகழேந்தி மற்றும் 14 பேரின்  பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் சார்பில்  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தாங்கள் தேச துரோகமாக எதுவும் செய்யவில்லை என்றும், அதன் காரணமாக தங்கள்மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று  கூறியிருந்தனர்.

இந்த வழக்கில் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ஐகோர்ட்டு கடந்த விசாரணையின்போது போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்றைய விசாரணையின்போது, டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 14 பேர் மீது தொடரப்பட்டுள்ள தேச துரோக வழக்கை ரத்து செய்ய முடியாத என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் காரணமாக டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 14 பேரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த வழக்கு காரணமாக  முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், பகுதி செயலாளர் சரவணன் உள்ளிட்ட தினகரன் ஆதரவாளர்கள் 10 பேரை சேலம்-அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.