யுபிஏ ஆட்சிக்கும், என்டிஏ ஆட்சிக்கும் இடையேயான பொருளாதார செயல்திறன்… ப.சிதம்பரம் ஆதாரத்துடன் விளக்கம்…

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ)  ஆட்சிக்கும்,  பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சிக்கும் இடையேயான பொருளாதார செயல் திறன் என்ன என்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளார்.
மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரம் கடுமையாக பின்னடைவை சந்தித்துள்ளது அனைவரும் அறிந்ததே.  மொத்த உள்நாட்டு உற்பத்தி,  வளர்ச்சி, பணவீக்க விகிதம், வரி விகிதம், ரெப்போ வீதம் மற்றும் பல போன்ற பல முக்கிய அளவுருக்களில் இந்திய பொருளா தாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இது கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதன் பாதிப்பு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் பணவீக்க விகிதம் 2.50 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. பொருளாதார சரிவுக்கு மோடி ஆட்சியின் திறமையின்மைதான் காரணம் என பொருளாதார வல்லுநர்களும், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட பொருளாதார மேதைகள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், மோடி ஆட்சியில்தான் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து வருவதாக மார்தட்டிக் கொள்ளும் பாஜகவினருக்கு பதில் அளிக்கும் வகையில், அரசின் அதிகாரப்பூர்வமான தகவல்களை  முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பட்டியலிட்டு பறைசாற்றி உள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தலையை மணலில் புதைத்து வைத்திருக்கும் பாஜகவில் உள்ள நண்பர்களுக்கு, யுபிஏ (2009-2014) மற்றும் என்டிஏ (2014-2019) ஆகியவற்றுக்கு இடையிலான பொருளாதார செயல்திறனில் உள்ள பரந்த வேறுபாட்டைக் காண்க என்று தெரிவித்துள்ளவர்,

யுபிஏவின் முதல் ஐந்து ஆண்டுகளை (2004-2009) ஒப்பிட்டுப் பார்த்தால், வேறுபாடு அதிகமாக வெளிப்படும். அவை இந்திய பொருளாதாரத்தின் பொற்காலம் என்று அதற்கான விளக்கத்தை தெளிவாக பட்டியலிட்டு கூறியுள்ளார்.

நுகர்வோர் உணர்வை அளவிடும் அதிக அதிர்வெண் குறிகாட்டிகளின் அடிப்படையில், மோடி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியை விட மன்மோகன்சிங் தலைமையிலான 5 ஆண்டு கால ஆட்சி சிறந்தது என்பதை, புள்ளி விவரங்களுடன் தெரிவித்து உள்ளார்.

அதன்படி,
உள்நாட்டு ஸ்கூட்டர் விற்பனை: மன்மோகன்சிங் ஆட்சியில் (2009-2014 ) 25.7 சதவிகிதமாக இருந்தது. அது மோடி ஆட்சியில் ( (2014-2019) வெறும் 13-21 ஆக உள்ளது.
உள்நாட்டு டிராக்டர் விற்பனை: மன்மோகன்சிங் ஆட்சியில் (2009-2014 ) 15.73 சதவிகிதமாக இருந்தது. அது மோடி ஆட்சியில் ( (2014-2019) வெறும் 4.49 ஆக உள்ளது.
அதிகரிக்கும் சில்லறை கடன்கள்: மன்மோகன்சிங் ஆட்சியில் (2009-2014 ) 22.47 சதவிகிதமாக இருந்தது. அது மோடி ஆட்சியில் ( (2014-2019) வெறும் 19.92 ஆக உள்ளது.
விமான பயணிகள் போக்குவரத்து: மன்மோகன்சிங் ஆட்சியில் (2009-2014 ) 9.2 சதவிகிதமாக இருந்தது. அது மோடி ஆட்சியில் ( (2014-2019) வெறும் 15.28 ஆக உள்ளது.
இந்திய ரயில்வேயின் பயணிகளின் வருவாய்: மன்மோகன்சிங் ஆட்சியில் (2009-2014 ) 10.81 சதவிகிதமாக இருந்தது. அது மோடி ஆட்சியில் ( (2014-2019) வெறும் 7.32  ஆக உள்ளது.
உள்நாட்டு வணிக வாகனங்கள் விற்பனை: மன்மோகன்சிங் ஆட்சியில் (2009-2014 ) 10.5 சதவிகிதமாக இருந்தது. அது மோடி ஆட்சியில் ( (2014-2019) வெறும் 9.74 ஆக உள்ளது.
எஃகு நுகர்வு: மன்மோகன்சிங் ஆட்சியில் (2009-2014 ) 7.18  சதவிகிதமாக இருந்தது. அது மோடி ஆட்சியில் ( (2014-2019) வெறும் 5.18 ஆக உள்ளது.
சிமென்ட் உற்பத்தி: மன்மோகன்சிங் ஆட்சியில் (2009-2014 ) 7.5 சதவிகிதமாக இருந்தது. அது மோடி ஆட்சியில் ( (2014-2019) வெறும் 4.32 ஆக உள்ளது.
வருமான வரி வளர்ச்சி: மன்மோகன்சிங் ஆட்சியில் (2009-2014 ) 17.53 சதவிகிதமாக இருந்தது. அது மோடி ஆட்சியில் ( (2014-2019) வெறும் 16.85 ஆக உள்ளது.
கார்ப்பரேஷன் வரி வளர்ச்சி: மன்மோகன்சிங் ஆட்சியில் (2009-2014 ) 13.09 சதவிகிதமாக இருந்தது. அது மோடி ஆட்சியில் ( (2014-2019) வெறும் 11.2 ஆக உள்ளது.
பெட்ரோலிய பொருட்களின் நுகர்வு: மன்மோகன்சிங் ஆட்சியில் (2009-2014 ) 3.47 சதவிகிதமாக இருந்தது. அது மோடி ஆட்சியில் ( (2014-2019) வெறும் 5.91 ஆக உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள்: மன்மோகன்சிங் ஆட்சியில் (2009-2014 ) 5.29 சதவிகிதமாக இருந்தது. அது மோடி ஆட்சியில் ( (2014-2019) வெறும் 8.25ஆக உள்ளது.
இந்த தகவல்கள் அனைத்தும் அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இருந்து பெறப்பட்டது என்றும்,   இந்திய கண்காணிப்பு மையம்,  இந்தியா பிராண்ட் ஈக்விட்டி அறக்கட்டளை; இந்திய ரயில்வே அமைச்சகம், சாலை மற்றும் மேற்பரப்பு போக்குவரத்து; பட்ஜெட், ஆவணங்கள்; அரசாங்க  தரவின் அடிப்படையிலேயே தரப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.