த்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததாக வெளியாகியுள்ள புகைப்படம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இவர் தனது சொந்த ஊரான பீகார் மாநிலம் மோதிகாரிக்கு சென்றிருந்தார். அப்போது ராதா மோகன் சிங் நடுவழியில் கான்வாயை நிறுத்தி பாதுகாப்பு அதிகாரிகளை திரும்பி நிற்க சொல்லிவிட்டு சாலையோரத்தில் இருந்த சுவற்றில் சிறுநீர் கழித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தூய்மை இந்தியா திட்டத்தையும், பொது இடத்தில் சுத்தம் பேண வேண்டும் என்று பிரதமர் மோடி “சுவச் பாரத்” என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளார். இந்தநிலையில் அவரின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ராதா மோகன் சிங் பொது இடத்தில் சிறுநீர் கழித்துள்ளது பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சமூக வளை தளங்களின் கண்டனத்துக்கும், நக்கல், நையாண்டிக்கும் இந்த புகைப்படம் ஆளாகியுள்ளது.

இது தவிர அமைச்சர் பயணம் செய்த வாகனத்தில் சிகப்பு நிற சுழல் விளக்கும் பொறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் தங்கள் வாகனங்களில் சுழல் விளக்கு பொருத்தக் கூடாது என்று பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதை மீறியும் சுழல் விளக்கு இடம்பெற்றுள்ளது.