குழந்தை வரம் வேண்டி பக்கத்து வீட்டு பச்சிளங்குழந்தை நரபலி

ஜார்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டுக் குழந்தையை நரபலி கொடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில், செராய்கேலா- கர்ஸ்வான் மாவட்டத்தை சேர்ந்தவர் பதோய் காளிந்தி என்ற பாப்பு பிடிப்பவர்.

அவருக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை.  இதுகுறித்து அவர் தனது  நண்பரும், மந்திரவாதியுமான கர்மு காளிந்தி என்பவருடன் வருத்தப்பட்டுள்ளார்.

நண்பரின் சோகத்துக்கு கர்மு காளிந்தி ஒரு பரிகாரம் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து, இருவரும் சேர்ந்து  கடந்த மே மாதம் 26ம் தேதி, கர்முவின் பக்கத்து வீட்டுக்காரரான சுபாஷ் கோப் என்பவரின் ஏழு மாதப் பெண் குழந்தையை கடத்தி வந்துள்ளனர்.

பின்னர் அந்த குழந்தையுடன் டிருட்ல்டி நதிக்கரையில் உள்ள சுடுகாட்டில் பூஜை செய்து நரபலி கொடுத்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து கர்மு தலைமறைவானார்.  குழந்தை காணாமல் போனது குறித்து கர்முவின் பக்கத்து வீட்டுக்காரர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

போலீசார் சந்தேகத்தின் பேரில் தலைமறைவான தேடிக் கண்டுபிடித்தனர். விசாரணையில்,  கர்மு, பதோய் இருவரும் சேர்ந்து குழந்தையை நரபலி கொடுத்தை ஒப்புக்கொண்டனர்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பதோய் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப் பட்டது.  ஆனால் கொலையுண்டான சிறுமியின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று  டிருல்டி காவல் நிலைய அதிகாரி சந்தீப் பகத் தெரிவித்துள்ளார்.

தனக்கு குழந்தை வேண்டி, பக்கத்து வீட்டுக்காரரின் பச்சிளங்குழந்தையை நரபலி கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.