காணாமல் போன மீனவர்களை மீட்க கோரி கடலுக்குள் இறங்கி போராட்டம்!

கன்னியாகுமாரி,

கி புயல் காரணமாக கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்க கோரி அந்த பகுதி மீனவ மக்கள் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர்.

மத்திய மாநில அரசுகள்   மாயமானவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் கோரிக்கை விடுத்து, கடலுக்குள் இறங்கி கன்னியாகுமரியில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

ஓகி புயலின் போது கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இன்னும் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீட்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்,  காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் குடும்பத்தினர் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மீனவர்கள், பொதுமக்கள் கண்ணில் கருப்பு துணிகளை கட்டி  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி கடற்கரையில் அப்பகுதி மீனவர்கள் குடும்பத்தினர், கடலில் சிக்கி உள்ள மீனவர்களை விரைந்து மீட்க வலியுறுத்தி  கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.