“நான்கு மாதங்களாக சீமானால் சித்ரவதை’’ அலறும் விஜயலட்சுமி.

பிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள விஜயலட்சுமி, நேற்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சின்ன சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆனால், தனது இந்த முடிவுக்கு ’’ நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானே காரணம்’’ எனக் குற்றம் சாட்டி விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ பிரளயத்தையே உருவாக்கியுள்ளது.

‘’இது எனது ‘’கடைசி’’ வீடியோ’’ என்று குறிப்பிட்டு விஜயலட்சுமி சமூக வலைத்தளங்களில் பரப்பிய ‘மரண சாசனம்’ இது:

‘’நான் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டுள்ளேன். இது தான் நான் பேசும் கடைசி வீடியோவாக இருக்கும்.

கடந்த நான்கு மாதங்களாகச் சீமான் மற்றும் அவரது கட்சியினரால் நான், மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானேன். எனது தாய் மற்றும் சகோதரிக்காக உயிர் வாழவேண்டும் என நினைத்தேன். ஆனால் முடியவில்லை.

நான் கர்நாடகாவில் பிறந்தவள் என்பதால் என்னை சீமான் அளவுக்கு அதிகமாகச் சித்ரவதை செய்கிறார். என் ரசிகர்களுக்கு ஓர் வேண்டுகோள். சீமானை சும்மா விடாதீர்கள். அவருக்கு முன் ஜாமீன் கூட கொடுக்கக்கூடாது.

எனது மரணம் எல்லோருக்கும் பாடமாக இருக்கட்டும். யாருக்கும்  அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை’’

இவ்வாறு தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி, வீடியோ பதிவில் புகார் பட்டியல் வாசித்துள்ளார்.

-பா.பாரதி.