சீமான் உள்பட 9 பேருக்கு ஜாமீன்

சேலம்:

சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள், சமூக ஆவலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த வகையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் சேலம் பாறைப்பட்டி அருகே பூவாங்காடு பகுதியை சேர்ந்த மக்களை நேற்று சந்தித்தார். அவர்களிடம் சீமான் கலந்துரையாடினார். அவருடன் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசபாண்டியன், மாநில மகளிர் பாசறை தலைவர் ஜானகியம்மாள், சேலம் மாவட்ட தலைவர் சசிகுமார் உள்ளிட்டோர் கலந்தகொண்டனர்.

தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து சீமான் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். இந்நிலையில் 9 பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சேலம் நீதிமன்றம் 9 பேருக்கும் ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டது.