திருமாவளவன் விவகாரம் : எச் ராஜாவுக்கு சீமான் எச்சரிக்கை

சென்னை

திருமாவளவன் குறித்த கருத்துக்கு எச் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என சீமான் கூறி உள்ளார்.

பாஜகவின் தேசிய செயலாளர் எச் ராஜா தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதனால் பலரும் அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். ஆயினும் அவர் தொடர்ந்து இது போன்ற கருத்துக்களை கூறி வருகிறார்.

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனன் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்தார். அவர், “திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் யாரும் தொட மாட்டார்கள்” என தெரிவித்திருந்தார். இது தீண்டாமையை குறித்த கருத்தாக பலரும் பொருள் கொண்டுள்ளனர்.

இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை ஆதரித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசி உள்ளார். அவ்ர், “திருமாவளவன் குறித்த கருத்துக்கு எச் ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.