டில்லியில் சீமான்: போராடும் விவசாயிகளுக்கு நேரில் ஆதரவு!

டில்லி,

டந்த 17 நாட்களாக தலைநகர் டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

விவசாய கடன் ரத்து, நதிகள் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 17 நாட்களாக டில்லி ஜந்தர் மந்திரில் போராடி வருகின்றனர்.

அரை நிர்வாணமாக, சாலையோரம் அமர்ந்து, மரணம் அடைந்த விவசாயிகளின் மண்டை ஓடுகளை வைத்துக்கொண்டு எலிக்கறி, பாம்புக்கறி, தூக்கு கயிறு, பிச்சையெடுக்கும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று 17வது நாளாக வாயில் கறுப்பு துணி கட்டி போராடி வருகின்றனர்.

இன்று மாலை அவர்களை ராகுல்காந்தி சந்திக்க இருக்கும் நிலையில், முற்பகல் 12 மணி அளவில் நாம் தமிழர் கட்சி ஒருக்கிணைப்பாளர் நாம் நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

தொடர்ந்து இன்று மாலை 3 மணிக்கு இந்திய தேர்தல் கமிஷனரையும் சீமான் சந்திக்க இருக்கிறார்.