பொய்பேசும் அரசியல் வியாபாரி சீமான்! இலங்கை தமிழ் எம்.பி. கடும் பாய்ச்சல்

சென்னை:

லங்கை தமிழர்கள் குறித்தும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்தும், ஆவேசமாக பேசி வருபவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  இவருக்கு  இலங்கை தமிழ் எம்.பி. யோகேஸ்வரன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பொய்களையே பேசி வருபவர் சீமான் என்றும், அவர் ஒரு அரசியல் வியாபாரி என்றும் கடுமையாக சாடியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய யோகேஸ்வரன் எம்.பி., இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில், இங்குள்ள அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக பேசி வருவதாக குற்றம் சாட்டியவர், ஈழப் பிரச்சனை குறித்தும் சீமான் போன்ற அரசியல்வாதிகள் தேவை இல்லாமல் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், திருமுருகன் காந்தி போன்றவர்களின் இலங்கை தமிழர்கள் குறித்த பேச்சால் அங்குள்ள தமிழர்களுக்கு பாதிப்புதான் அதிகரிக்கும் என கூறியவர்,  இலங்கையில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்த பிறகு, இவர்கள் வெற்று பேச்சு பேசி வருவதாகவும் சாடினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்ச்சிக்க சீமான், திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்றும் கேள்வி எழுப்பியவர், ராஜீவ்காந்தியை படுகொலை செய்ததை விடுதலைப் புலிகள் ஓரு போதும் ஓப்புக் கொள்ளவில்லை என்று கூறியவர், சீமான் தாங்கள்தான் கொன்றதாக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தங்கள்  ஆதாயத்திற்கு பேசும் பேச்சால் தங்களுக்கு தான் பிரச்சனை என்று வருந்தியவ்ர,  இவர்கள் தொடங்கி வைத்துவிட்டு உட்கார்ந்து விடுவார்கள்.. பாதிப்பு அங்குள்ள மக்களுக்கு என்பதை புரிந்துகொள் வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.