கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வரா சீமான் ? :   நாளை தெரியும்!

சீமான்
சீமான்

“நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், கட்சியைக் கலைத்துவிட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வாரா, அல்லது நாம் தமிழர் கட்சியையே தொடர்ந்து நடத்துவாரா என்பது நாளை தெரிந்துவிடும்” என்று பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்திவவருகிறார்கள்.

கடந்த மார்ச் மாதம், தந்தி தொலைக்காட்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.  இந்த விவாதத்தில்  பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன்(திமுக), சீமான் (நாம் தமிழர் கட்சி) ஆகியோர் பங்கேற்றார்கள்.

குறிப்பிட்ட டிவி விவாதம் (சீமான் - அருணன்)
குறிப்பிட்ட டிவி விவாதம் (சீமான் – அருணன்)

விவாதத்தின் போது “மக்கள் நலக் கூட்டணியை விட நாங்கள் ஒரு வாக்காவது அதிகம் பெறுவோம். அப்படி இல்லையென்றால் நாம் தமிழர் கட்சியைக் கலைத்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துவிடுகிறேன்” என்று சீமான்  ஆவேசமாக கூறினார்.  இது அப்போது பெருமளவில் கவனத்தை ஈர்த்தது.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் மீண்டும் அந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி, “என்ன செய்வார் சீமான்.. நாளை தெரியும்” என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியில்தான், சீமான், அருணனை “லூசுத்தனமா பேசாதய்யா” என்றதும், பதிலுக்கு அருணன், “நீதான்டா லூசு” என்றதும் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published.