சீனுராமசாமியின் அடுத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சமுத்திரக்கணி

சீனு ராமசாமியின் பெயரிப்படாத அடுத்த படத்தில் சமுத்திரக்கணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் சமுத்திரக்கணி  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது சீனுராமசாமி உதயநிதி ஸ்டாலின், தமன்னாவை வைத்து கண்ணே கலைமானே என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அடுத்த படத்தின் முக்கிய ரோலில் சமுத்திரக்கணி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இயக்குனர் சீனு ராமசாமி ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து, ‘தென்மேற்கு பருவக் காற்று’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட வெற்றி படங்களைக் கொடுத்துள்ளார். மேலும் தற்போது, விஜய் சேதுபதியை வைத்து   ‘மாமனிதன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தெரிவித்துள்ள இயக்குனர் சீனுராமசாமி,  விஜய் சேதுபதி நடிப்பில் ‘மாமனிதன்’ படத்தை இயக்கியபிறகே சமுத்திரக்கனி நடிக்கும் படத்தை இயக்குவேன்’ என்றும் கூறி உள்ளார்.

விரைவில் சகோதரர் சமுத்திரக்கனி நடிக்க, நான் இயக்க இணைவதென முடிவானது’ என சமுத்திரக்கனியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சீனு ராமசாமி.

சமுத்திரக்கனி தற்போது ‘நாடோடிகள் 2’ படத்தை இயக்கி வருகிறார். சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. வேலை நிறுத்தம் முடிந்தபிறகு அடுத்த ஷெட்யூல் தொடங்க இருக்கிறது. அந்த படப்பிடிப்பு முடிந்த பிறகு சீனு ராமசாமி படத்தில் நடிக்க உள்ளார்.