யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ள படம் ‘மாமனிதன்’.
2019-ம் ஆண்டு பிப்ரவரியுடன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
தற்போது ‘மாமனிதன்’ வெளியீடு தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பதிவில்:-


“’மாமனிதன்’ திரைப்படத்தில் நான்கு பாடல்களும் மற்றும் பின்னணி இசைக்கோர்ப்புப் பணிகளையும் இசைஞானி இளையராஜா முடித்துவிட்டார். யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு இசைக்கலைஞர்கள் ஒருங்கிணைப்பு செய்துகொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள்தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை”. என பதிவிட்டுள்ளார்.