ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படம் ‘சீறு’ .

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் நவ்தீப், சதீஷ், ரியா சுமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு பிரசன்ன குமார் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்

டிசம்பர் 6-ம் தேதி ‘சீறு’ படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்து ஆலோசனையில் இறங்கியது படக்குழு . தற்போது டிசம்பர் 6-ம் தேதி வெளியீட்டுக்குப் பதிலாக டிசம்பர் 20-ம் தேதியைத் தேர்வு செய்துள்ளது படக்குழு.