படுதோல்வி அடைந்த ’ சீதக்காதி ‘ – 22 நிமிட காட்சிகள் நீக்கம்!

விஜய் சேதுபதி நடித்து வெளியாகிய சீதகாதி திரைப்படம் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து படத்தில் தேவைப்படாத 22 நிமிட காட்சிகளை நீக்குமாறு விஜய் சேதுபதி தயரிப்பாளாரிடம் தெரிவித்துள்ளார்.

seethakathi

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் ’சீதக்காதி’. இந்த திரப்படம் கடுமையான போட்டிகளுக்கிடையே கடந்த 21ம் தேதி வெளிவந்தது. படத்தில் வெறும் 40 நிமிடங்கள் மட்டும் விஜய் சேதுபதி வந்தாலும், படம் முழுவதும் அவரை மையப்படுத்தி மட்டுமே காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளன.

அய்யா ஆதிமூலம்( விஜய் சேதுபதி ) என்ற ஒரு கதாப்பாத்திரத்தை மட்டுமே வைத்துக் கொண்டு 2மணி நேரம் 53 நிமிடங்கள் நீளத்தில் படத்தை பாலாஜி தரணிதரன் உருவாக்கியிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தவே படம் படுதோல்வி அடைந்தது.

ஏற்கெனவே படத்தில் விமர்சனங்களால் மனவேதனை அடைந்த இயக்குனர் பாலாஜி தரணிதரனுக்கு மற்றொரு அதிர்ச்சியை விஜய் சேதுபதி அளித்துள்ளார். அதாவது, படுதோல்வி அடைந்த சீதக்காதி திரைப்படத்தின் தேவைப்படாத 22 நிமிட காட்சிகளை நீக்குமாறு விஜய் சேதுபதி இயக்குனர் பாலாஜி தரணிதரனிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து சீதக்காதி திரைப்படத்தில் 22 நிமிட கட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.

You may have missed