காயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்? – கேள்வியெழுப்பும் சேவாக்!

புதுடெல்லி: ரோகித் ஷர்மாவுக்கு உண்மையிலேயே பிரச்சினையிருந்தால், அவர் எதற்காக இன்னும் மைதானத்தில் இருக்க வேண்டும்? என்று கேட்டுள்ள சேவாக், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு அவரை தேர்வு செய்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியப் பயணத்திற்கான இந்திய அணியில், ரோகித் ஷர்மா தேர்வுசெய்யப்படாதது குறித்த சர்ச்சை இன்னும் ஓய்ந்த பாடில்லை. இந்நிலையில், இதுகுறித்து சேவாக் கூறியுள்ளதாவது, “ரோகித்தின் காயம் எந்தளவில் உள்ளது என்பது குறித்து சரியாக தெரியவில்லை. மீடியாக்கள்தான் அதுகுறித்த தகவல்களை வெளியில் கொண்டுவர வேண்டும்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் என்பது ஒரு நீண்ட தொடர். எனவே, ரோகித்தை நிச்சயம் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். அவர் ஒரு முக்கியமான ஆட்டக்காரர்.

அவருக்கு, பிரச்சினையிருக்கிறதென்றால், அவர் எதற்காக மும்பை அணி ஆடும் போட்டிகளில் மைதானத்தில் இருக்க வேண்டும்? ஓய்வில்தான‍ே இருக்க வேண்டும்? எனவே, இதன்மூலம் அவருக்குப் பிரச்சினையில்லை என்பது தெரிகிறது. இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டதானது, ரோகித்திற்கு பெரிய வலியைக் கொடுத்திருக்க வேண்டும்” என்றுள்ளார் ரோகித் ஷர்மா.