பிரபல டிவி நடிகை தற்கொலை…..!

தில் தோ ஹேப்பி ஹை ஜி சீரியல் மூலம் பிரபலமானவர் செஜால் சர்மா. சீரியல் நாயகனின் சகோதரியாக செஜால் நடித்திருந்தார்.

மும்பை மீரா ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தார் .
30 வயதான அவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தவர். விளம்பரம் மற்றும் வெப் சீரியசிலும் அவர் நடித்துள்ளார். அவர் நடித்த டில் தோஹ் ஹேப்பி ஹாய் ஜி என்ற சீரியல் பாலிவுட்டில் மிகவும் பிரபலமானதாகும்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கிய தில் தோ ஹேப்பி ஹை ஜி சீரியல் திடீர் என்று ஆகஸ்ட் மாதம் முடிக்கப்பட்டது.

இந்நிலையில் செஜால் தன் வீட்டு படுக்கையறையில் இருக்கும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .

தற்கொலைக்கு செய்யும் முன்பு எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் தன் முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

டிவி சீரியல் திடீர் என்று முடிக்கப்பட்டதால் செஜால் மன அழுத்தத்தில் இருந்தார். அவர் வேறு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்த்தார். அவர் தற்கொலைக்கு இதுவே காரணமாக இருக்கும் என அவர் நட்பு வட்டாரம் தெரிவிக்கிறது .