சேகர் ரெட்டியின் காவல் நீட்டிப்பு : சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு  

சென்னை,

பிரபல தொழில்அதிபர் சேகர் ரெட்டி மத்திய அமலாக்கத்துறை மற்றும் வருமான வரி துறையினரின் அதிரடி சோதனையை தொடர்ந்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு உதவியாக அவரது கூட்டாளிகளான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த டிச.21-ந் தேதி 3 பெரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சேகர் ரெட்டி மீதான வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில்,  தொழிலதிபர் சேகர் ரெட்டியின் காவலை மார்ச் 14-ம் தேதி வரை நீட்டித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேகர் ரெட்டி நண்பர் பிரேம்குமார், உறவினர் சீனிவாசலுவின் காவலும் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.