கிரிக்கெட் : இலங்கை அணி தேர்வுக் குழுவினர் விலகல்

கொழும்பு

ந்திய – இலங்கை கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை தோல்வியுற்றதை அடுத்து இலங்கை அணியின் தேர்வாளர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

இலங்கையில் சமீபத்தில் நடந்த இந்திய – இலங்கை லிமிடெட் ஓவர் போட்டிகளில் 3-0 என்னும் கணக்கில் இலங்கை தோல்வியுற்றது.  இது இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியது.  இதையொட்டி சனத் ஜெயசூர்யா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட இலங்கை வீரர்கள் தேர்வுக் குழு தனது ராஜினாமாவை அளித்துள்ளது.

இது குறித்து தேர்வுக் குழுவினர் அளித்த அறிக்கையில் “நடந்து முடிந்த போட்டிகளில் இலங்கை அணி தோல்வியுற்றதை அடுத்து நாங்கள் எங்கள் தேர்வுக் குழுப் பதவிகளில் இருந்து விலகுகிறோம்.  இது நன்கு யோசித்து எடுத்த முடிவாகும்.   கிரிக்கெட் விளையாட்டின் மேல் எங்களுக்குள்ள ஆர்வத்தை புரிந்துக் கொள்ளாமல் பலரும் நடந்துக் கொண்டது எங்களின் மனதை புண் படுத்தி உள்ளது.  நாங்கள் கண்ணீருடன் விலகுகிறோம்” என தெரிவித்துள்ளனர்.