கேரள மாநில சட்டசபை தேர்தல்: தேர்வுக் குழு அமைத்தது காங்கிரஸ்

திருவனந்தபுரம்: கேரள மாநில சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய குழு ஒன்றை காங்கிரஸ் அகில இந்திய தலைமை அறிவித்துள்ளது.

குழுவின் தலைவராக எச்.கே.படேல் அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்த குழுவில் உறுப்பினர்களாக துத்தில்லா ஸ்ரீதர் பாபு, தாரிக் அன்வர், பிரநிதி சிண்டே, முல்லப்பள்ளி ராமசந்திரன், ரமேஷ் சென்னிதலா, உம்மன் சாண்டி மற்றும் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களை நியமித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார்.