டெல்லி:  சுயநிதி கல்லூரிகள் மாணாக்கர்களிடம் வசூலிக்க வேண்டிய கல்விக்கட்டணத்தை அவர்களே தீா்மானிக்கலாம் என  உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது.  அதே நேரம், அந்த கட்டணம் லாபநோக்கு உடையதாக இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கேரளத்தில் உள்ள தனியாா் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில்  மாணவா்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கல்விக் கட்டணதை அரசு நிர்ணயித்தை எதிர்த்து தாக்கல் செய்யப்ப்டட வழக்கில்,  கேரள உயா்நீதிமன்றம், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மாணவா்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை பரிந்துரைக்க வேண்டும். அந்தக் கட்டணம் லாப நோக்குடன், மாணவா்களைச் சுரண்டும் நோக்கத்துடன் பரிந்துரைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதாக மட்டுமே கட்டண ஒழுங்கு முறை குழு வின் ஆய்வு இருக்க வேண்டும் என கூறியதுடன்,  சுயநிதி கல்வி நிறுவனங்களின் கட்டண ஒழுங்குமுறை குழு தலையிட முடியாது என்று உத்தரவிட்டது.

இந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில்  முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரிக்கப்பட்டு வநத்து.  வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது கேரளாவில்,  சட்ட விதிகளின் அடிப்படையில் செயல்படும் கட்டண ஒழுங்குமுறை குழுவின் அதிகாரத்துக்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டதுடன்,   சுயநிதி கல்லூரிகளின் கட்டணத்தை நிா்ணயிக்க கல்வி நிறுவனங்களின் தணிக்கை செய்யப்பட்ட கணக்குப் பதிவு விவரங்களை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றதுடன்,  மாணவா்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை தீா்மானிக்கும் உரிமை சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு உண்டு. அதே நேரம், அந்த உரிமை ஒழுங்குபடுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.